இனிவரும் வாரங்களில் மின்வெட்டு இல்லை
எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க 5 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த 14 நாட்களுக்கும் தொடர்ந்து மின்சாரம் வழங்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை விளக்கினார்.