அடிக்கடி தாகம் வந்தால் அது தீவிர நோய்க்கு அறிகுறியா? மருத்துவரின் ஆலோசனை
உடலில் அடிக்கடி தாகம் எடுத்தால் அது தீவிர நோய்க்கு அறிகுறி என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தந்தாலும் அது அடிக்கடி தாகம் ஏற்பட்டால் உடலுக்கு நன்மை இல்லை என்று கூறப்படுகின்றது.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். தண்ணீர் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதால், பல நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
ஆனால் அடிக்கடி தாகம் எடுப்பது, உடலில் இரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, நம் உடலானது அதை சிறுநீர் மூலம் அகற்றுகிறது.
இதனால் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, அடிக்கடி தாகம் எடுக்கிறது. பெண்களுக்கு வரக்கூடிய ரத்தசோகைக்கும் இந்த தண்ணீர் தாகம் ஒரு அறிகுறியாகும்.
வறண்ட வாய் காரணமாகவும், மீண்டும் மீண்டும் தாகம் எடுக்கும். இதுபோல வறண்ட வாய் வாய் துர்நாற்றம், சுவையில் மாற்றம், ஈறுகளில் எரிதல் மற்றும் உணவை மெல்லுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்திலும் பெண்களுக்கு அதிகளவிலான தண்ணீர் தாகம் ஏற்படும். ஆனால் இத நோய் அறிகுறி அல்ல என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.