அரசாங்கத்தை கவிழ்க்க அராஜகவாதிகள் முயற்சி: பங்களாதேஷ் பிரதமர் தகவல்
இலங்கையில் ஏற்பட்டது போன்ற குழப்பத்தை உருவாக்கி அரசாங்கத்தை கவிழ்க்க அராஜகவாதிகள் முயல்கின்றனர் என்று பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனா (Sheikh Hasina), இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் (Bangladesh) இற்கான இந்திய உயர்ஸ்தானிகர் பிரனய் வர்மாவை (Pranay Verma) நேற்று (31) சந்தித்தபோது ஹசீனா இதனைக் கூறியுள்ளார்.பங்களாதேஷில் கடந்த மாத ஆரம்பத்தில் இடஒதுக்கீட்டு கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் நடத்திய போராட்டம், வன்முறையாக மாறியதில் சுமார் 150 பேர் வரை கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
anarchists-attempt-to-overthrow-government
இந்தநிலையில், குறித்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள சேக் ஹசீனா, அதற்காக ஐக்கிய நாடுகள் உட்பட்ட சர்வதேச அமைப்புக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒதுக்கீட்டு சீர்திருத்தம் தொடர்பான போராட்ட இயக்கம், ஒரு சாதாரண இயக்கம் அல்ல, மாறாக ஒரு கட்டத்தில், அது கிட்டத்தட்ட ஒரு பயங்கரவாத தாக்குதலாக மாறியது என்று ஹசீனா குறிப்பிட்டுள்ளார்.