fbpx

பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிகள்!

அரசாங்க பாடசாலைகள் செயற்பாடுகள் எதிர்வரும் ஆனி 29 ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய புதிய விதிகள் பற்றி கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் R.M.M. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் படி அவர் தெரிவித்த விடயங்களின் சாராம்சம் வருமாறு:

  • வகுப்பறை ஒன்றின் மாணவர்களின் உச்ச எண்ணிக்கை – 25
  • மாணவர்கள் சேர்ந்து விளையாட்டில் ஈடுபட தடை
  • பெற்றோருடனான கூட்டங்கள் மறுஅறிவித்தல் வரை இடை நிறுத்தம்

ஏற்கனவே நான்கு கட்டங்களாக பாடசாலை கல்வி செயற்பாடுகள் நடைமுறைப் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

  • அதிபர், ஆசிரியர், கல்வி சாரா ஊழியர் சமூகம் – 2020/06/29 தொடக்கம்
  • தரம் 5,11,13 – 2020/07/06
  • தரம்10,12 – 2020/07/20
  • தரம் 3,4,6,7,8,9 – 2020/07/27
  • தரம் 1,2 – இன்னமும் முடிவு செய்யப்படவில்லை
Back to top button