சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை – பகுதி 2
பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் “சர்வதேச சட்டம்: அரசுகளின் பொறுப்புடைமை” என்ற தொடர், 4 பகுதிகளாக வெளிவர உள்ளது. அதன் முதல் பகுதி ஏற்கனவே வெளிவந்திருந்தது. இன்று அதன் இரண்டாவது பகுதி வெளிவருகின்றது.
சர்வதேச சட்டத்தின் கீழ் எவ்வகையான செயற்பாடுகளுக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும் என தீர்மானிப்பதே ஐ.எல்.சி வரைவு ஆவணத்தின் நோக்கமாகும். இவ்வரைவின் 2ம் அத்தியாயத்தின் உறுப்புரைகள் 4 தொடக்கம் 11 வரை மேற்குறித்த விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது.
உறுப்புரை 4ல் வெளிப்படுத்தப்பட்ட பொதுவிதிகளின் படி உள்நாட்டுச்சட்டத்தினால் அதிகாரம் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடப்பாட்டைக்கொண்டுள்ள நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கதுறை, நீதித்துறை மற்றும் வேறு தொழில்களைப்புரியும்; அரச அதிகாரி அல்லது அமைப்பு, அரசின் கடமையை செய்வதாக கருதப்படும். ஜூனோசைட் வழக்கில் அதிகாரிகளின் செயல் அரசின் மீது சாட்டப்படுவது அரச பொறுப்புடைமை கோட்பாட்டின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் எனப்பட்டது. ஐ.எல்.சி உறுப்புரை 4ன் விளக்கவுரை 7ல் கீழ்நிலை மேல்நிலையென பாகுபாடில்லாமல் சகலரின் செயல்களும் அரசிடம் பொறுப்பாக்கப்படும்.
மேற்குறித்த பொதுவிதிகளைத்தவிர ஐ.எல்.சி உறுப்புரைகளில் தனிநபர் அல்லது அமைப்பின் செயல்கள் அரசினால் செய்யப்பட்டவையாக கருதப்படும் சிக்கலான சூழ்நிலைகள் எடுத்துக்காட்டப்பட்;டுள்ளது.
ஐ.எல்.சி உறுப்புரை 5ன் படி அரசின் அங்கமல்லாத கையளிக்கப்பட்ட அதிகாரத்தை கொண்ட நபர்களால் அல்லது அரசின் முகவர்களினால் செய்யப்பட்ட செயல்களும் சர்வதேச ரீதியாக அரசின் செயல்களாகவே கருதப்படும்;. பெக்ராமி வழக்கில் கொசோவாவில் நேட்டோவின் ஒருபகுதி நாடுகளை சேர்த்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையால் உருவாக்கப்பட்ட படைகளின் கொத்துக்குண்டுளால் சிறுவர்கள் உயிரிழந்தமைக்கு ஐக்கிய நாடுகள் சபை பொறப்பு கூற வேண்டும் என்பதுடன் வழக்கை விசாரிக்கும் நியாயாதிக்கம் தமக்கில்லை என மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய யூனியன்; நீதிமன்றம் தெரிவித்தது.
ஐ.எல்.சி உறுப்புரை 6ன் படி ஒருநாட்டின் அரச அங்கத்துவர்களால் இன்னொரு நாட்டில் செய்யப்பட்டவையும் சர்வதேச ரீதியாக அரசின் செயல்களாகவே கருதப்படும். செவ்ரியு வழக்கில் பேர்சியாவில் ஐக்கிய இராச்சிய வெளிநாட்டு பிரதிநிதி தற்காலிகமாக பிரான்சின் பிரதிநிதியாக பணியாற்றிய போது காணாமல் போண ஆவணங்கள் தொடர்பாக பிரான்ஸ் வழக்கிட்ட போது அவ்வாறான கடமைகள் தொடர்பான ஏற்பாடுகள் கடப்பாடுகளில் காணப்படாமையால் ஐக்கிய இராச்சியம் பொறுப்பாகாது என தீர்க்கப்பட்டது.
ஐ.எல்.சி உறுப்புரை 7ன் படி ஒருநாட்டின் அரச அங்கத்துவர்களால் செய்யப்படும் அதிகார வரம்பு மீறல் அல்லது வலுவிகழ்தலும் சர்வதேச ரீதியாக அரசின் செயல்களாகவே கருதப்படும். அத்துடன் செய்யப்பட்ட செயல்களுக்கு கடும்பொறுப்பு விதிப்பதையும் வலியுறுத்தும். ஷப்ரோ வழக்கில் ஐக்கிய இராச்சியத்திற்கு சொந்தமான கப்பலில் வேலைசெய்த சீன பணியாட்கள் குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட சேதம் ஐக்கிய இராச்சிய கடற்படை அதிகாரி;களால் தடுத்திருக்கக் கூடிய செயலாகவே இருப்பதால் அவர்கள் பொறுப்பாக்கப்பட்டனர்.
ஐ.எல்.சி உறுப்புரை 8ன் படி அரசின் வழிகாட்டுதல், அறிவுறுத்தல்களில் தங்கியிருக்கும் அல்லது கட்டுப்பாட்டின் கீழ் செயற்படும் நபர்கள், குழுக்களின் செயற்பாடுகள் சர்வதேச ரீதியாக அரசின் செயல்களாகவே கருதப்படும். நிகாராகுவா வழக்கில் ; ஐக்கிய அமெரிக்கப்படைகளால் நிதி, ஆயுத உதவி பெறும் குழுக்களால் ஏற்பட்ட சேதத்திற்கு அந்நாடு பொறுப்பாக்கப்பட்டது.
இவ்வழக்கில் வினைத்திறனான கட்டுப்பாடு (Effective Control) எனும் விதி விளக்கப்பட்டது. இதன்படி வெறுமனே ஆயுத, நிதி உதவிகளை வழங்குவது மடடுமல்லாமல் குழுக்களுக்கு பயிற்சி வழங்கல், திட்டமிடல், மேற்பார்வை செய்தல் போன்றவற்றை அரசு செய்தமை உறுதிப்படுத்தப்பட்டதால் வினைத்திறனான கட்டுப்பாடு உண்டு எனப்பட்டது. எனினும் சகல வழக்குகளிலும் இவ்விதி சோதிக்கப்படுவதில்லை.
தாடிக் வழக்கில் கட்டுப்பாடு தொடர்பான அளவீடு(Degree of Control) வழக்கு நிகழ்வுகளுடன் மாறுபடும் எனப்பட்டது. கொங்கோ வழக்கிலும் கட்டுப்பாட்டு பரீட்சை நடாத்தப்படாமல் தீர்க்கப்பட்டது. எனினும் பின்னர் வந்த ஜுனோசைட் வழக்கில் ; தாடிக் வழக்கின்; தீர்ப்பு விமர்சிக்கப்பட்டதுடன் வினைத்திறனான கட்டுப்பாட்டு விதிக்கு ஆதரவாக கருத்து வெளியிடப்பட்டது.
நமிபியா வழக்கில் ஆட்புலத்தை பௌதீக ரீதியாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு சார்ந்த நபர்களால் செய்யப்படும் செயல்களுக்கு அரச பொறுப்பாகும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறியது.
ஐ.எல்.சி உறுப்புரை 9ன் படி அரச அதிகாரிகள் இல்லாத நிலையில் அல்லது குறைபாடுகள் காரணமாக பதவியில் இல்லாத போது அவர்களுக்கு பதிலாக அரசினால் நியமிக்கப்படும் நபர்கள், குழுக்களின் செயற்பாடுகள் சர்வதேச ரீதியாக அரசின் செயல்களாகவே கருதப்படும். இக்கருத்து பழைய வழக்குகளில்; சர்வதேச வழக்காற்றுச் சட்டத்தின் கூறுகளிலொன்றாக பயன்படுத்தப்பட்டது.
ஜுகர் வழக்கில் ஈரான் புரட்சியின்பின்னர் நியமிக்கப்பட்ட படையினரின் செயல்கள் இந்த உறுப்புரைக்கு அமைவானதென ஈரான்- ஐக்கிய அமெரிக்கா உரிமைக்கோரிக்கை தீர்ப்பாயம் கூறியது.
(தொடரும்)
சட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட எமது பதிவுகளை படிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
எமது பதிவுகள்,செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் சமூகத்துடன் இணையுங்கள்