முகமுடி அணிந்த கோழை நான்
வாழ்க்கை என்னை பல சந்தோஷ வழிகளில் இழுத்துச்செல்ல, உலகிலுள்ள சுதந்திரப் பறவை நான் தான் என்ற மிதப்பில் பறந்து திறந்த காலம் அது. எப்படிப்பட்ட சவால் வந்தாலும் எதிர்த்து நிற்கும் தைரியம் உண்டு என்று இவ்வளவு நாளும் நினைத்துக்கொண்டிருந்த மனதிற்குள் திடீரென வீசிய புயல் மிகப்பெரிய கேள்வியை விட்டுச்சென்றது.
“பிரச்சினை என்றால் இன்னதென்று உனக்கு தெரியுமா?” இதுதான் அந்த கேள்வி. அதற்கு பிறகு தான் சிந்திக்க ஆரம்பித்தது மனம், உண்மையிலேயே என் வாழ்க்கை இவ்வளவு மென்மையானதா? இதுவரை எனக்கு தெரியவே இல்லையே. உயிரான பெற்றோர், அன்பான சகோதரம், இன்பமான வீடு, உடன்பிறவா தோழி, சுயநலமற்ற நட்புக்கள், திருப்தியான தொழில், மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கு, நினைத்த நேரம் பயணங்கள், ஆசைக்கு தடைபோடா சொந்தங்கள், கடனில்லா மனம், மூன்று நேரம் உணவு, நிம்மதியான உறக்கம் என பட்டியல் நீண்டுகொண்டே போக, இதற்கிடையில் கவலை என்ற சொல்லுக்கே இடமில்லை. இப்படிப்பட்ட வாழ்வில் சவாலுக்கு ஏது நேரம்.
இதுதான் வாழ்க்கை, நான் தான் தைரியசாலி என்ற அகந்தை எத்தனை நாட்களுக்கு தான் செல்லுபடியாகும். வாழ்க்கை என்றாலே மேடும் பள்ளமும் வரத்தானே செய்யும். அப்படித்தான் அந்த புயலும், என்னை ஒரு கணம் சிந்திக்க வைத்தது. நாமும் எம் வாழ்க்கை இப்படித்தான் என்ற ஒரு எண்ணத்தில் ஒரு வட்டத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
எல்லாம் நன்மைக்கே என்பது போல், எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் புயல் அடிப்பது, பிரச்சினை வருவது, நாம் சற்று எம் வட்டத்தைவிட்டு வெளியே வரவேண்டும் என்பதால் தான். பிரச்சினையை கண்டு உடைந்து போகாமல், முகங்கொடுக்கும் தைரியசாலி எங்களில் எத்தனை பேர்?
என்னை தாக்கிய புயலால் நான் என்னை உணர்ந்துகொண்டேன், இத்தனை நாளாக தைரியசாலி என்ற முகமுடி அணிந்த கோழை நான் என்று.
இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.
எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.